ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது

295 0

1305766857menarres2ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் மேலும் 4 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தொடர்புகளைக் கொண்டிருந்த சந்தேகத்திலேயே இந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.

குறித்த நபரால் முகநூலில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் ஒன்றில் காணப்படும் மோட்டார் சைக்கிள் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.