ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல விடயங்களை வெளியிட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒக்டோபர் 6 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஆணையகத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நிச்சயமாக பதிலளிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதுதவிர மேலும் பல சர்ச்சைக்குரிய உண்மைகளை வெளிப்படுத்துவேன் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், குறித்த ஆணையத்தை சந்தித்து பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்த தான் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறிகொதாவில் தெரிவித்துள்ளார்.