பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தில் பல திருத்தங்களைக் குழு கூட்டத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பாராளுமன்றம் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியின் அதிகாரத் திற்கு இரண்டரை ஆண்டு வரம்பு விதிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் ஒரு வருடத்திற்குப் பிறகு கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி க்கு வழங்கியுள்ளது.
இந்த திருத்தத்தில் மீண்டும் உறுதிமொழியைச் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கவும், தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர் களின் எண்ணிக்கையில் மூன்று பிரிவுகளாகவும், அதன் கோரம் இரண்டாகவும் புதிய உட்பிரிவுகளைச் சேர்க்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் அனைத்தையும் குழுக் கூட்டத்தில் சேர்க் கக் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகத் தெரி விக்கப்படுகிறது.
குறித்த திருத்தம் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த அனு மதித்தல், அவசரக்கால சட்டங்களை நிறைவேற்றுதல், தணிக்கையிலிருந்து அரசுக்குச் சொந்தமான நிறுவனங் களை நீக்குவது போன்ற பிரிவுகளில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.