திலீபன் அண்ணாவின் தியாகப்பயணத்தின் 33 வது நினைவு வணக்க நாளின் 10 வது நாள்

382 0

இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26 1987 ல் இறந்தார்.

திலீபன் அண்ணாவின் தியாகப்பயணத்தின் 33 வது நினைவு வணக்க நாளின் 10 வது நாளினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கலை பண்பாட்டு கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது .மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அகவணக்கத்தினை தொடர்ந்து திரு உருவத்திற்க்கான மலர்மாலை அணிவித்தல் மற்றும் தீப வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .

நிகழ்வுகளில் நினைவு சுமந்த கவிதை ,உரை , வயலின் இசை மற்றும் நடன நிகழ்வுகளுடன் நினைவுரையினை தமிழினப் படுகொலை நீதிக்கான ஜ.நா நோக்கிய மிதி வண்டிப் பரப்புரை அறப்போராளியும் பெல்ஜியம் நாட்டின் இளையோர் அமைப்பின் செயலாளருமான திரு ஈழன் தொடர்ந்து கருத்திரையினை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழ் தேசிய அரசியற் செயற்பாட்டாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்களும் வழங்கியிருந்தார்கள் .