சிறிலங்காவில் பி.சி.ஆர் சோதனைகள் 2,75,000 யை கடந்தது

268 0

சிறிலங்காவில் இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர்.சோதனைகளின் எண்ணிக்கை, 275,590யை கடந்துள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 1612   பி.சி.ஆர்.சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய இலங்கையில் நடத்தப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 2,75,000 யை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று சுகாதார அமைச்சும், கொரோா வைரஸ் தொடர்பான சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இலங்கையில் இதுவரை 3,327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,142 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 172 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் கொரோனா  தொற்றினால் இதுவரை   13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.