சரியான அரசியலமைப்பு எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும்: பிரசன்ன ரணதுங்க

259 0

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் எதிர்காலத்தில் முறையான அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் மூலம் தனக்கு வாக்களித்தவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பார் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றில் ஒத்திவைப்பு வேளையின்போது தெரிவித்தார்.

நிறுவனங்கள் தங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றினால் சுதந்திர ஆணைக்குழுக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கும். ஆணைக்குழுக்கள் அதன்படி செயற்பட்டால் மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இருக்காது என அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வெளிப்படையாக இருந்த அதேவேளை அதன் உறுப்பினர்கள் பாகுபாடு காட்டியதாகவும் அமைச்சர் கூறினார்.

ஏனைய ஆணைக்குழுக்களின் சில உறுப்பினர்கள் தங்கள் சொந்த அரசியல் லாபத்துக்காக செயற்படுகின்றனர். நாட்டை அராஜகத்தை நோக்கி தள்ளிய அரசியலமைப்பை மாற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் அந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கடந்த பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வெளிப்படையாக இருந்த அதேவேளை அதன் உறுப்பினர்கள் பாகுபாடு காட்டியதாகவும் அமைச்சர் கூறினார்.

ஏனைய ஆணைக்குழுக்களின் சில உறுப்பினர்கள் தங்கள் சொந்த அரசியல் லாபத்துக்காகச் செயற்படுகின்றனர். நாட்டை அராஜகத்தை நோக்கித் தள்ளிய அரசியலமைப்பை மாற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் அந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்றும் அவர் மேலும் கூறினார்.