தேசியப் பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்துக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு மறுப்பு வெளியிடும் வகையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்திருந்த நிலையில், ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் மாத்திரமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.