பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
வரவு செலவுத் திட்ட யோசனையில் சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதன்படி, இன்று காலை 8 மணிமுதல் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சங்கம் அறிவித்த போதிலும், அது குறித்து முன்கூட்டி எவ்வித பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் இன்றைய தினம் நடத்தப்பட உள்ள பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் நடத்தப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.