ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான விசா ரணைகள் நிறைவடைந்துள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான் டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய சுந்தர ஆகியோருக்கு எதிரான ஆரம்ப விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக் களம் இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத் திற்கு அறிவித்தது.
இந்நிலையில், சட்ட ஆலோசனைக்காக வழக்கைச் சட்ட மா அதிபரிடம் பரிந்துரைத்ததாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்தது.
ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று நீதிமன்றத் தில் ஆஜரானார்கள், குறித்த வழக்கை அடுத்த ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி மீண்டும் கூட்ட வேண் டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.