பசியோடு இருந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 7 ஆவது நாள். யேர்மனி முன்ஸ்ரர் நகரில் நினைவுகூரப்பட்டது.

854 0

இந்திய வல்லாதிக்கத்திடம் 5 அம்ஸ்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஏழாவது நாள் இன்று யேர்மனி முன்ஸ்ரர் நகரத்தில் மிகச் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.

இந் நிகழ்வானது தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பை ஆரம்பித்த புரட்டாதி மாதம் 15 ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக யேர்மனியின் முக்கிய நகரமத்தியில் நினைவுகூரப்படுகின்றது. அந்த வகையிலே 7 ஆவது நாளான இன்று முன்ஸ்ரர் நகரத்தில் நினைவு கூரப்பட்டது.

எட்டாவது நாளான நாளையதினம் யேர்மனி கெற்றிங்கன் நகரமத்தியில் நடைபெறயிருக்கின்றது. அந்த நகரத்தில் வாழும் தமிழ் மக்களை தியாகதீபத்திற்கு மலர்துர்வி சுடர் ஏற்ற உரிமையுடன் அழைக்கின்றார்கள்.

Am Marktplatz (Gänseliesei)

37073 Göttingen