20வது திருத்தத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
20வது திருத்தம் குறித்து வெளியான வர்த்தமானிஅறிவித்தலை எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் மீளப்பெறாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தை நீக்கிவிட்டு புதிய சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கான மக்கள் ஆணையை அரசாங்கம் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நடவடிக்கை எதனையும் மக்களிடமிருந்து மறைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் அரசமைப்பு திருத்த நடவடிக்கைகள் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படும்எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தின் போது அனைத்து தரப்பினரும் தங்கள் மாற்றங்களை முன்வைக்க முடியும் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.