பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்-ஜனாதிபதி

317 0

mythribalaநாட்டில் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பின் பிரகாரம் அதனை பேணுவதற்கும், ஒரு பௌத்தனாக இருந்து சமயத்துக்கான சகல கடமைகளையும் செய்வதற்கு தான் முன்னிற்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ராமன்ஞா பிரிவின் மகாநாயக்கர் நாபான பேமசிரி தேரரின் 95 ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

பௌத்த மதம் தொடர்பில் அரச கொள்கையாக, அடிப்படையில் அரசியல் அமைப்பில் எழுத்து மூலம் கூறப்பட்டுள்ள அம்சங்களுக்கு மதிப்பளித்து, அதனை நிறைவேற்றுவது எனது பொறுப்பு.

அதற்கு அப்பால், ஒரு பௌத்தன் என்ற ரீதியிலும் இந்த நாட்டின் பிரஜை என்ற வகையிலும், சாசனத்தைப் பாதுகாப்பதையும், பௌத்த சிந்தனையை போசிப்பதையும் திறம்பட மேற்கொள்வேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.