பிரேசில் வானூர்தி விபத்து – 76 பேர் பலி

311 0

_92712372_036631323-1கொலம்பிய மெடிலின் நகரத்தை நோக்கி பயணித்த வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியாகினர்.

பிரேசில் கால்பந்தாட்ட அணி உட்பட 81 பயணிகளுடன் சென்ற இந்த வானூர்தியில் இருந்து 5 பேர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலில் இருந்து பொலிவியா ஊடாக பயணித்த விசேட வானூர்தியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாளை இடம்பெற விருந்த முதல் கட்ட இறுதி கிண்ண போட்டியில் இந்த கால் பந்தாட்ட அணி கலந்து கொள்ள இருந்தது.

இந்தநிலையில் தற்போது அந்த போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.