ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

5794 39

1467351567_2478273_hirunews_ApprovedPublicityPhoto2copyமறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகள் உறுப்பினர்களாக இருக்ககூடிய ஐ.நா. சபையில் உலகில் நிகழும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதை சீர்செய்வதற்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த ஐ.நா பொது சபையில் வரும் ஆகஸ்ட் 15-ம் திகதி கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்று விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது SUNSHINE இசைக்குழுவுடன் கலந்துகொண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.

Leave a comment