தென்கொரிய ஜனாதிபதி பாக் குயன் ஹைய் (Park Geun-hye) பதவியில் இருந்து விலகுவதற்கு நாடாளுமன்றத்தின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதாயத்தை பெறும் நோக்கில் நீண்ட கால நண்பர் ஒருவருக்கு அவர் வந்தார் என தொடர்சியாக பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியாக இருக்கும் காலப்பகுதியினை குறைப்பதற்காக தாம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த நிலையிலும் தென்கொரிய ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாக இருக்கு கூடாது எனவும் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனதிபதியின் நிலைப்பாடு வெளியானதை அடுத்து இந்த விடயம் குறித்து நாடாளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட அமர்வொன்றை நடத்த தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் குறித்து கொரியாவின் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் தற்போதைய நிலைப்பாடு கண்துடைக்கும் செயல் என தெரிவித்துள்ளது.
மக்கள் விரும்புவது அவரின் உடநடி பதவி விலகளையே என குறிப்பிடப்பட்டுள்ளது.