பாடசாலைச் சூழலில், சீருடைகள் விற்பனை செய்யும் நோக்கில் அவற்றை கொண்டுச் செல்ல எவருக்கும் அனுமதியில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதுபோல் அதிபர்களும் அதிகாரிகளும் இதன் பொருட்டு வர்த்தக நிலையங்களை பரிந்துரை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர்கள் சீருடை விநியோகத்தில் தலையிட முடியாது என்பதுடன் இது கொடுப்பனவு பத்திரத்தை கண்டிப்பாக மாணவர்களின் கைகளில் பாரப்படுத்த வேண்டும்.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் குறித்த கொடுப்பனவு பத்திரத்தை எந்த ஒரு வர்த்த நிலையத்திலும் கொடுத்து பாடசாலை சீருடைகளை பெற்று கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.