அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்து தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
களணி பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான இந்த பேரணி பொறளை, ராஜகிரிய ஊடாக நாடாளுமன்றத்தை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, அந்த பேரணி காரணமாக பொறளை, ராஜகிரிய பகுதிகளிலும் அவற்றை அண்மித்த பகுதிகளிலும் குறித்த காலப்பகுதியில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில், மாணவர்களின் பேரணி நாடாளுமன்றத்தை நோக்கி பயணிக்க முற்பட்ட வேளையில், நாடாளுமன்றத்திற்கு முன்னால் வைத்து இவ்வாறு தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.