அரச மருத்துவர்கள் நாளை காலை 8 மணிமுதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
நாடளாவிய ரீதியாக இதனை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூலம் அரச சேவை மற்றும் இலவச சுகாதார சேவை ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தே, இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சகல சிறுவர் மருத்துவமனைகள், பெண்கள் மருத்துவமனைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்கான சிகிச்சியை அளிக்கும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமைபோல் இயங்கும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.