தேர்தலை பிற்போடும் அவசியம் இல்லை – பைசர் முஸ்தபா

295 0

faizer-mustaphaஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை நாடாளுமன்றில் வைத்து கூறியுள்ளார்.

மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய அவர், தற்போது எல்லை மறுசீரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கான அறிக்கை நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், தேர்தல் நடத்தப்படும்.

தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு பிற்போடவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.