டுபாயில் இலங்கையர்களுக்கு சிறை

277 0

jail1டுபாயில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்களுக்கு ஒருவருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் உள்ள மாளிகை ஒன்றை உடைத்து களவாடியதாக குறித்த மூன்று பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய இருவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில்இ அவர்களின் பிரசன்னம் இல்லாமல் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில்இ கைது செய்யப்பட்டிருந்த இலங்கையரை ஒரு வருடம் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னர் அவர் நாடுகடத்தப்படவுள்ளார்.