மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு நிதியத்தின் பதில் பணிப்பாளர் பரக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவோரின் எண்ணிக்கை தற்பொழுது 47 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அவர் கூட்டிக்காட்டினார்.