எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிக்கும் பணிகள் நாளைய தினம் தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிப்பதன் மூலம் எச்ஐவி தொற்றினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்த நிலைமையை கட்டுப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும் என்று அமெரிக்காவின் தொற்றுநோயியல் தொடர்பான தேசிய ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் அன்டனி பவுச்சி தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் மாத்திரம் நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எச்ஐவி தொற்றுக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.