அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை காலை முதல் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அதன் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று காலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.