கச்சதீவின் புதிய ஆலயத் திறப்பிற்கு இந்தியர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யக் கோரிக்கை

315 0

katchatheevu_anthoகச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள புதிய ஆலய திறப்பு விழாவில், இந்திய தமிழர்கள் 100 பேரை பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள புதிய ஆலய திறப்பு விழாவில், இந்திய தமிழர்கள் 100 பேர் பங்கேற்பதற்கான அனுமதி குறித்து இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் உறுதியளித்துள்ளார்.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரை மீனவ பிரதிநிதிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
புதிய நாணயத்தாள் தட்டுப்பாட்டுக்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும், வங்கிகளில் வாரத்துக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதி அளித்ததாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படை வசமுள்ள தமிழகத்தை சேர்ந்த 108 படகுகளை, டிசம்பர் மாதத்துக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் உள்ள 15 மீனவர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்ததாக மீனவப் பிரதிநிதிகள் கூறினர்.