கருணாவிற்கு டிசெம்பர் 7 வரை விளக்கமறியல்

327 0

images-3கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விநாயகமூர்த்தி முரளீதரன் இன்று கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்ற பிரதான நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான சுமார் ஒன்பது கோடி ருபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று போலீஸ் நிதி மோசடி பிரிவில் விநாயகமூர்த்தி முரளீதரன் முன்னிலையாகி இருந்தார்.

விநாயகமூர்த்தி முரளீதரன் விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாகவும், பின்னர் கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் மீள்குடியேற்ற மற்றும் நல்லிணக்கத்துக்கான பிரதி அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.