கலகொட அத்தே ஞானசாரவுக்கு அழைப்பாணை

304 0

gnatherar-680x365பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

தலாஹென பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு, ஞானசார உள்ளிட்ட 13 பேர் குற்றமற்றவர்கள் என்று அறிவித்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து சட்ட மா அதிபரினால் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, கலகொட அத்தே ஞானசார முன்னிலையாகி இருக்காத நிலையில், அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.