இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த தமது விஜயத்தை கம்போடியாவின் பிரதமர் ஹூன் சென், ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்துக்குள் அவர் இலங்கைக்கு, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஷிலாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
எனினும் மிகமுக்கிய பணிகள் காரணமாக அவரால் திட்டமிட்டபடி, விஜயத்தை மேற்கொள்ளமுடியவில்லை என்று கம்போடியாவின் அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.