படகு விபத்து

275 0

201605170806521474_hooghly-boat-accident-19-bodies-recovered_secvpfகாலி – அம்பலங்கொட கடற்பரப்பில் கடற்றொழில் படகு ஒன்று அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது.

காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கரையில் இருந்து 10 கடல்மைல்கள் தொலைவில் இந்த படகு அனர்த்தத்துக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மீனவர்களால் இது குறித்த தகவல் வழங்கப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் குறித்த படகினை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த படகில் இருந்த மீனவர்களின் விபரங்கள் எவையும் இன்னும் வெளியாகவில்லை.