ஒஹியோவில் தாக்குதல்

263 0

333051053_1280x7202ஒஹியோ பல்கலைக்கழகத்தில் தாக்குதலை நடத்தியவர், சோமாலியாவைச் சேர்ந்த அகதி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்துல் ரசாக் அலி அர்த்தான் என்ற 18 வயதான குறித்த அகதி, தமது மகிழுந்தை பல்கலைக்கழகத்தின் பாதசாரிகளது பாதையில் செலுத்தி மாணவர்களை மோதச் செய்தார்.

பின்னர் மகிழுந்தில் இருந்து இறங்கு அங்கிருந்த மாணவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து காவற்துறையினர் அவரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தீவிரவாதத்துடன் தொடர்புடையதா? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது.