20 ஆவது திருத்தச் சட்டம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்

311 0

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் 22 ஆம் திகதி ஆணைப் பத்திரத்தில் சேர்க்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பான சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதாகப் பாராளுமன்ற துணைப் பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார்.

குறித்த வரைவுக்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்வதானால், அதற்காக 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்திற்குச் சென்று மனுத் தாக்கல் செய்தால், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுபெறுவதற்கு மூன்று வாரங்கள் எடுக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த மசோதாவை இரண்டாவது வாசிப்பு விவாதத்திற்குப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

வரைவில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அவற்றைக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படும் போது சேர்க்கலாம் என அவர் தெரிவித்தார்.