கொரோனாவினை கட்டுப்படுத்த சிறிலங்கா மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை

258 0

சிறிலங்காவில் மக்கள் அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சுதத் சமரவீர இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கை சிறந்த மட்டத்திலுள்ளது.

மக்களின் ஒத்துழைப்பினாலேயே இதனை எம்மால் பேண முடிந்தது. இந்த நிலைமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த மாதங்களில் சமூகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டார்கள் என்பதை மறக்காமல் அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.