யேமனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்

275 0

5637-isiss-mass-grave532170277உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யேமன் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்த்தக கப்பலின் 9 இலங்கை அதிகாரிகளை விரைவில் நாட்டுக்கு அழைத்துவருமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கிரேக்கத்துக்கு சொந்தமான ஃபெயா எபோலொன் என்ற இந்த கப்பல் யேமனில் உள்ள ஹொடெய்டா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலை ஒப்பந்தத்துக்கு எடுத்துக் கொண்ட நிறுவனத்துக்கும்இ கப்பல் உரிமை நிறுவனத்துக்கும் இடையிலான நிதிமுரண்பாடுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் யேமனில் வழக்கு விசாரணையும் இடம்பெறுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த கப்பலின் 26 அதிகாரிகளில் 9 பேர் இலங்கையர்கள் என்ற நிலையில்இ அவர்களை விரைவாக இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாகஇ இலங்கையின் வர்த்தக கப்பல் செயலகம் தெரிவித்துள்ளது.