கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் இவ்வேளையில் அவ் விதிமுறைகளுக்கு அமைவாக முன்சன்கிளட்பாக் நகரமத்தியில் நடைபெற்ற இந் நிகழ்வில் அந்த நகரத்தில் உள்ள தமிழ் மக்களும் யேர்மனிய மக்களும் மலர்தூவி விளக்கேற்றி தங்கள் வணக்கத்தை வெளிப்படுத்தினர்.
அத்தோடு திலீபனின் தியாக வேள்வி சம்பந்தமான விடயங்கள் யேர்மன் மொழியில் அச்சிடப்பட்டு படங்களுடன் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
தமிழ் இளையோர்கள் அங்கு வந்த வேற்றின மக்களுக்கு இந்திய வல்லாதிக்கத்தின் சதியையும் சிங்கள இனவாத அரசின் கொ¬ரமான முகத்தையும் விரிவாக எடுத்துரைத்தனர்.
தியாக தீபத்தின் நான்காவது நாளை யேர்மனி பிராங்போட் என்னும் நகரத்தின் மத்தியில் மாலை 16 மணியிலிருந்து 18 மணிவரை நடைபெறவுள்ளது. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் இந் நிகழ்வில் அந்த நகரத்தில் வாழும் தமிழ்மக்கள் வருகைதந்து உங்கள் வணக்கத்தை தெரிவிக்குமாறு உருமையுடன் அழைக்கின்றோம்.
நாளைய நிகழ்வு நடைபெறும் முகவரி:
St. Katharinenkirche
An der Hauptwache 1
60313 Frankfurt am Main