இலங்கை கடலோரப் படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில், இந்திய கடலோரப் படையினர் கைச்சாத்திடவுள்ளனர்.
அடுத்த ஆண்டு கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக இந்திய கடலோரப் படையினர் ஆறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்படி இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவிருப்பதாக இந்திய கடலோரப் படையினரின் பணிப்பாளர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.