தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வரும் தமிழ்த்திறன் போட்டியின் 2019ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப்போட்டி கோவிட்19 என்ற கொடியநோய்த் தொற்றினால் பெப்ரவரிமாதம் நடைபெறாது பிற்போடப்பட்டது அனைவரும் அறிந்ததே.
ஆறு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் கோவிட்19 இடையறாது தொற்றி வருகின்றது. இந்நிலையில் தமிழ்த்திறன் இறுதிப் போட்டியை இரு பிரிவுகளாகப் பிரித்து நடாத்தும் திட்டம் வகுக்கப்பட்டு, பின் வரும் போட்டிகள் கட்டுரை, உறுப்பமைய எழுதுதல், ஓவியம் என்பன நாடு முழுவதிலும் 12 விசேட நிலையங்களில் சென்ற 13.09.2020 சிறப்பாக நடைபெற்றன. போட்டிகளில் 200க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஏனைய 350க்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கான கவிதை, உரையாற்றல், வாசித்தல், மனனம், சொல்வதெழுதுதல் போன்ற போட்டிகள் எதிர் வரும் 19.09.2020 சனிக்கிழமை
Ricarda-Huch-Gymnasium
Moerser Straße 36
47798 Krefeld
என்ற முகவரியில் நடைபெறவுள்ளன. அங்கேயும் பங்குபற்றிய அனைவருக்கும் பதக்கமும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்படும்.