சிறிலங்காவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று!

259 0

சிறிலங்காவில்  மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டாரில் இருந்து வந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,273 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,043 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 217 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை  கொரோனா தொற்று தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.