முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.
குறித்த மனு இன்றைய தினம் (வியாழக்கிழமை) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த மனுவை எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது முறையற்ற விதத்தில் செயற்பட்டமை மற்றும் நபர் ஒருவரை காயத்துக்கு உள்ளாக்கியமை தொடர்பாக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல நீதிமன்றில் முன்னிலையானதை தொடர்ந்து கடந்த ஜூன் 03 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.