பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலங்கொட, கல்தொட்ட பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரகம, அட்டுளுகம , மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் கடந்த 9 ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும் போது பொலிஸ் ஜீப் வாகனத்தை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.