கருணா கைது – நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

301 0

vinayagamoorthy-muralitharan-asking-to-vote-tamil-national-alliance-karuna-amman-720x480-720x480முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அழைப்புக்கிணங்க இன்று முன்னிலையாகியிருந்த கருணா அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் நிதிமோசடி பிரிவினால் இன்றைய தினம் விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன்இ இன்று பகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு விசேட ஜுரிகள் சபை முன்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணையிலும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக கொலை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.