வன்முறை குழுவை சேர்ந்த விக்டர் சுந்தர் என்ற நபர் மீது மற்றொரு குழுவினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது, கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த விக்டர் சுந்தர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (17) காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் கூறினர்.
கல்வியங்காடு பகுதியில் வைத்து, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மற்றொரு குழுவினர், அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.