கருணா நிதிமோசடி பொலிஸில் ஆஜர்!

286 0

karuna-718முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸின் நிதிமோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று(29) குறித்த பிரிவில் ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே தேடப்பட்டு வந்த, கருணா பயன்படுத்தியதாக கூறப்படும் அதிசொகுசு வாகனம் ஒன்று மட்டக்களப்பில் வாகன திருத்தும் இடம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையிலேயே அவர் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.