இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட தொகையை அரசாங்கம் அறிக்கையிட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த அறிக்கையின்படி, குறித்த கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து 340 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரிக்கையை சட்டமா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.
நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், அதற்கு வழங்கிய ஒத்துழைப்புகளைச் சுட்டிக்காட்டியும் சட்டமா அதிபர் தபுல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரி கப்பலின் உரிமையாளர்களின் சட்டத்தரணிகளிடம் இந்த செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இதேவேளை, இழப்பீட்டுத் தொகையை முழுமையாக செலுத்தும்வரை கப்பலை இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.