சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது சிறீலங்கா!

283 0

1-4அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கு சீன அரசாங்கத்தின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கடந்த அரசு அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்காக சீன அரசாங்கத்திடம் பெற்ற கடனை அடைப்பதற்காக அம்பாந்தோட்டை மற்றும் மத்தல விமான நிலையங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமை மாற்றம் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.

ஆனால், மத்தல விமான நிலையத்தின் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு சீன அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நிபுணர் குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை நிராகரித்த சிறீலங்கா அரசாங்கம் இது தொடர்பாக சீன அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.