தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இரண்டாவது நாள் நினைவேந்தல் யேர்மனி ஸ்ருட்காட் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது.

1598 0

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு தாயகத்தில் மக்கள் வணக்கம் செலுத்துவதற்கு சிறிலங்கா இனவாத அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் வீதியில் இறங்கி செயற்படவேண்டிய தருணமாக இக்காலகட்டம் இருக்கின்றது.

தன் இனத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு மலர்தூவி விளக்கேற்றுவதற்கான சாதாரண மனித உரிமையைக் கூட சிறிலங்கா அரசாங்கம் கொடுமையான சட்டங்களைப் பாவித்து தடுத்துள்ளமை சர்வாதிகாரப் போக்கு என்பதனை உலகமக்களுக்கு எடுத்தியம்ப வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

அந்த வகையிலே யேர்மனியில் திலீபன் அவர்களின் நினைவேந்தலை நகரங்களின் மத்தியில் நிகழ்த்தி வருகின்றனர். திலீபன் உண்ணானோன்பிருந்த இரண்டாவது நாளான இன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரமத்தியில் கொரோனா நோயின் விதிகளுக்குட்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வு மூண்றாவது நாளான நாளையதினம் யேர்மனி முன்சன்கிளட்பாக் நகரமத்தியில் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.