நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவினதும், சீனாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சில அமைச்சர்கள் எதற்காக சிறீலங்கா சீனாவை நோக்கித் திரும்பியுள்ளதாக கேள்விகளைக் கேட்கின்றனர் என நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அப்படியாயின், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எங்கிருந்து பணத்தைப் பெறமுடியும்.
இந்தியாவின் உதவி கிடைத்திருக்காவிட்டால் நாட்டில் தொடருந்து வலையமைப்பை எவ்வாறு அபிவிருத்தி செய்யமுடியும்.
சில அரசியல்வாதிகள் நாங்கள் சீனாவையும், இந்தியாவையும் நோக்கித் திரும்பக்கூடாது என மக்களுக்குக் கூறி வருகின்றனர். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் தெரிவித்தார்.