யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்வது தார்மீகக் கடமையெனவும் இதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடை விதிக்கக்கூடாது

566 0

vasudeva-nanayakkara-660x330சிறீலங்காவில் இரண்டுமுறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவர் றோகண விஜயவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிர் நீத்த தினத்தையும் அனுட்டிக்கமுடியும் எனவும் அதில் எந்தவிதத் தவறுமில்லையெனவும் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்வது தார்மீகக் கடமையெனவும் இதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடை விதிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், யுத்தத்தை நினைவுகூர்தல் என்ற போர்வையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நினைவுகூர்வதும் இதன் மூலம் தனித் தமிழீழத்தைக் கோருவரும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.