பிரான்சில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு

272 0

hunபிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் பிரான்ஸ் டீழனெல என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எதிர்பாராத விதமாக குறித்த சிறுமி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்காக காரணம் ஏதும் அறியப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.