ஹம்பாந்தோட்டை துறைமுகம் தனியாருக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் மீதான வரவு – செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
நாட்டு வளங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நல்லாட்சி அரசு இருக்கின்றது.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதே எமது நோக்கம். முதலீட்டாளர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றோம்.
தனியாரையும் இணைந்துக்கொண்டு உரித்தையும் விட்டுக்கொடுக்காது முன்னோக்கிப் பயணிப்பதே எமது திட்டமாகும். மாறாக துறைமுகத்தை தனியார் மயப்படுத்தும் திட்மில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.