இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மந்தபோசனை

256 0

625-0-560-320-160-600-053-800-668-160-90இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவிகிதமானோர் மந்தபோசனைக் குறைபாடு கொண்டவர்களாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மொனராகலை, பொலநறுவை, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் மந்தபோசனைக் குறைபாடுகளுடன் உள்ளது.

மேல் மாகாணத்தில் மருதானை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலுள்ள பாடசாலைகளிலும் இந்தக் குறைபாடு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 30 சதவிகிதமானோர் இரும்புச்சத்துக் குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகவும் கல்வியமைச்சின் பாடசாலை போசனை மற்றும் சுகாதார சேவைப் பிரிவின் பணிப்பாளர் ரேணுகா பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இரும்புச்சத்து விற்றமின் மற்றும் அடங்கிய பால் மற்றும் உணவுகளை வழங்க திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.