கம்பஹா நீதிமன்றத்தினால் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச பிடியாணை சட்டரீதியற்றது என லங்கா இ நியூஸின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர தெரிவித்துள்ளார்.
கம்பஹாவின் நீதிவான் காவிந்த நாணயக்காரவுக்கு எதிராக இணையத்தளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் சட்டப்படி சீ.ஐ.டியினருக்கே சர்வதேச பிடியாணை உத்தரவை பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும் கம்பஹா நீதிவான், சீ.ஐ.டியின் கோரிக்கை இல்லாமலேயே பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளதாக சந்தருவன் சுட்டிக்காட்டியுள்ளார்.